தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கமல்ஹாசன் படத்தில் இணைந்த மலையாள எழுத்தாளர்

 

சென்னை: கமல்ஹாசனின் புதுப்படத்தில் பிரபல மலையாள திரைப்பட எழுத்தாளர் ஷ்யாம் புஷ்கரன் இணைந்துள்ளார். பல்வேறு மொழிகளில் சண்டைக் காட்சிகளை வடிவமைத்த ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவு என்கிற அன்பு, அறிவு ஆகியோரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இது அவரது 237வது படமாக உருவாகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது. இப்படத்துக்கான பிரீ-புரொடக்‌ஷன் பணிகள் பல மாதங்களாக நடந்து வருகிறது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள எழுத்தாளர் ஷ்யாம் புஷ்கரன் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மலையாளத்தில் வெளியான ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘மஹேஷிண்டே பிரதிகாரம்’, ‘மாயநதி’ உள்பட பல படங்களுக்கு ஷ்யாம் புஷ்கரன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.