தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

மனிதன் ரீ ரிலீஸ்

சென்னை: ரஜினி நடித்த ‘மனிதன்’ படத்தினை அக்டோபர் 10-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் 1987-ம் ஆண்டு வெளியான படம் ‘மனிதன்’. இப்படம் திரையரங்குகளில் 25 வாரங்களுக்கு மேல் ஓடி பெரும் வசூல் சாதனை புரிந்தது. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி, சோ, வினுசக்கரவர்த்தி, ரூபிணி, ரகுவரன், செந்தில், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்துக்கு சந்திரபோஸ் இசையில், வைரமுத்து பாடல்கள் எழுதியிருந்தார். தற்போது ரஜினி திரையுலகிற்கு வந்து 50-வருட பொன்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ‘மனிதன்’ படத்தினை டிஜிட்டல் முறையில் உருவாக்கியுள்ளனர். இதனை குரு ராஜா இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடவுள்ளது.