தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

மந்தாகினி ஆன பிரியங்கா சோப்ரா

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. தற்காலிகமாக SSMB29 என்று அழைக்கப்படும் இப்படத்தின் அறிமுக விழா நாளை ஐதராபாத்தில் பிரமாண்டமான முறையில் நடக்கிறது. இதில் ஹீரோயினாக நடிக்கும் பிரியங்கா சோப்ராவின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது. அவர் மந்தாகினி என்ற கேரக்டரில் நடிக்கிறார். பல வருட இடைவெளிக்கு பிறகு தென்னிந்திய ெமாழியில் அவர் நடிப்பதால், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் அறிமுக விழாவுக்காக உருவாக்கப்பட்ட பாடல் வெளியிடப்பட்டது. ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இசையில் ஸ்ருதிஹாசன் பாடிய இப்பாடல் வைரலானது. அதேவேளையில், பிருத்விராஜ் சுகுமாரனின் அறிமுக போஸ்டர் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நாளை நடக்கும் விழாவில் படத்தின் பெயர், மகேஷ் பாபுவின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படுகிறது. இவ்விழா ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.