மாமரம் விமர்சனம்...
ஜெய் ஆகாஷ், மீனாட்சி இருவரும் காதலிக்கும்போது மாஞ்செடியை நடுகின்றனர். பிறகு காதலி தனக்கு செய்த துரோகத்தால் காதலையும், காதலர்களையும் வெறுக்கும் ஜெய் ஆகாஷ், கல்லூரி காம்பவுண்டில் நடப்பட்டு வளர்ந்த மாமரத்துக்காக, தனதுஉயிரையே கொடுக்க தயாராக இருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்பது மீதி கதை. பல்வேறு கெட்டப்புகளில் தோன்றி, தனது காதலிக்காகவும், பிறகு நண்பர்களுக்காகவும் உருகுகிறார் ஜெய் ஆகாஷ்.
மனநலம் பாதிக்கப்பட்ட கெட்டப்பில் பரிதாபப்பட வைக்கிறார். அவருக்கும், மாமரத்துக்குமான பிணைப்பு சுவாரஸ்யமாக இருக்கிறது. மீனாட்சி, நிஷா, ‘காதல்’ சுகுமார், கேபிஒய் திவாகர், ராகுல் தேவ், பிரம்மாஜி, அருணாசலம், மதுரை சக்திவேல், பிரம்மானந்தம், பாஷா, சத்யம் ராஜேஷ், ரம்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.
பவுல் பாண்டி ஒளிப்பதிவு, நந்தா இசை அமைத்த பாடல்கள், ஜெய் ஹரிஷாந்த் பின்னணி இசை, ஏ.சி.மணிகண்டன் எடிட்டிங் ஆகியவை படத்துக்கு பலம் சேர்த்துள்ளன. எழுதி இயக்கியுள்ள ஜெய் ஆகாஷ், திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். காட்சிகள் முன்னுக்கு பின் முரணாக இருப்பதால் குழப்பம் ஏற்படுகிறது. என்றாலும், காதலில் அழுத்தம் இருக்கிறது.