தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

சினிமாவிலும், நிஜத்திலும் அம்மாவான மந்த்ரா

தமிழில் விஜயுடன் ‘லவ்டுடே’, அஜித்துடன் ‘ரெட்டை ஜடை வயது’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மந்த்ரா. பிறகு, ‘பிரியம்’, ‘கண்ணன் வருவான்’, ‘கங்காகவுரி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மந்த்ரா இயக்குனர்  முனி என்பவரை கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு ஐதராபாத்தில் செட்டிலாகி விட்டார்....

தமிழில் விஜயுடன் ‘லவ்டுடே’, அஜித்துடன் ‘ரெட்டை ஜடை வயது’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மந்த்ரா. பிறகு, ‘பிரியம்’, ‘கண்ணன் வருவான்’, ‘கங்காகவுரி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மந்த்ரா இயக்குனர்  முனி என்பவரை கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு ஐதராபாத்தில் செட்டிலாகி விட்டார். தெலுங்கில் ராசி என்ற பெயரில் நடித்துவந்த மந்த்ரா தமிழில் கிளாமராகவும், தெலுங்கில் குடும்பப் பாங்கான ரோலில் நடித்து வந்தார். கடைசியாக தமிழில் ‘வாலு’, ‘கவலை வேண்டாம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு ஒருசில கதைகளை மட்டும் தேர்வுசெய்து நடித்துவந்த மந்த்ரா தற்போது தமிழில் ‘உசுரே’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் நடிகை ஜனனிக்கு அம்மாவாக நடிக்கிறார். இதே நேரத்தில் தனது நிஜ வாழ்விலும் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக இருக்கிறார். இதுகுறித்து பட நிகழ்ச்சியில் பேசிய அவர், ”நான் ரீ என்ட்ரி ஆகி இருக்கிறேன். நல்ல கதைக்காக தமிழில் காத்திருந்தேன். இந்த படத்தில் அம்மாவாக நடித்தாலும், என் கேரக்டரில் நிறைய புதுமைகள் இருக்கும். என் மகளாக நடித்த ஜனனி, படத்திலும், நிஜத்திலும் கொஞ்சமான வார்த்தைகளைதான் பேசுகிறார். எனக்கு நிஜத்திலும் ஒரு மகள் இருக்கிறாள். ஒரு படத்துக்கு தயாரிப்பாளர், இயக்குனர், கேமராமேன், இசையமைப்பாளர்கள்தான் படத்தின் நான்கு துாண்கள்’’ என்றார்.