தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

மெடிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் “அதர்ஸ்“ !!

‘அதர்ஸ்’ மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. புதிய அறிமுகம் ஆதித்யா மாதவன், கடமை உணர்வுமிக்க காவல் அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 96, மாஸ்டர் போன்ற படங்களில் தன் நடிப்புத் திறமையால் பாராட்டைப் பெற்ற கவுரி G. கிஷன், இப்படத்தில் மருத்துவராக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்....

‘அதர்ஸ்’ மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதிய அறிமுகம் ஆதித்யா மாதவன், கடமை உணர்வுமிக்க காவல் அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 96, மாஸ்டர் போன்ற படங்களில் தன் நடிப்புத் திறமையால் பாராட்டைப் பெற்ற கவுரி G. கிஷன், இப்படத்தில் மருத்துவராக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அதர்ஸ் படத்தில் அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி, ஜகன், R.சுந்தர்ராஜன் உள்ளிட்ட நடிகர் பட்டாளம் இணைந்து நடித்துள்ளனர்.

டிமாண்டி காலனி புகழ் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, தீரன் அதிகாரம் ஒன்று, உத்தம வில்லன், துணிவு போன்ற புகழ்பெற்ற படங்களுக்கு இசையமைத்த ஜிப்ரான், பாடல்களும், பின்னணி இசையும் அமைத்துள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி, லவ்வர், லப்பர் பந்து போன்ற ஹிட் ஆல்பங்களைத் தந்த மோகன் ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். அசுரன், விடுதலை போன்ற படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய எடிட்டர் ராமர், இந்தப் படத்தை எடிட் செய்துள்ளார். உமா சங்கர் வடிவமைத்த செட் டிசைன்கள், படத்தின் கதைக்கு உயிர் ஊட்டியுள்ளது.

தமிழ் திரையுலகிற்கு வருகை தரும் புதிய திறமைகளை வரவேற்று முன்னணி நட்சத்திரங்கள் வெங்கட் பிரபு, ஆர்யா, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், வாணி போஜன், இரா சரவணன், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட பலர், சமூக ஊடகங்களில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு வாழ்த்தியுள்ளனர்.

கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) முரளி தயாரிப்பிலும், கார்த்திக் G இணைத் தயாரிப்பிலும், முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள “அதர்ஸ்” திரைப்படம், வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.

நடிப்பு, கதை, தொழில்நுட்பம் என எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் “அதர்ஸ்“ திரைப்படம் பார்வையாளர்களை கவரத் தயாராகவுள்ளது.