மெடிக்கல் கிரைம் திரில்லர் அதர்ஸ்
சென்னை: புதுமுகம் ஆதித்யா மாதவன் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள படம், ‘அதர்ஸ்’. டாக்டராக கவுரி ஜி.கிஷன் மற்றும் அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பெராடி, மாலா பார்வதி, ஜெகன், ஆர்.சுந்தர்ராஜன் நடித்துள்ளனர். விளம்பரத்துறையில் எடிட்டராக பணியாற்றிய அபின் ஹரிஹரன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் வைபோதா இசை அமைத்துள்ளார்.
மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார். ராமர் எடிட்டிங் செய்ய, உமா சங்கர் அரங்கம் அமைத்துள்ளார். முழுநீள மெடிக்கல் கிரைம் திரில்லர் படமான இதன் பர்ஸ்ட் லுக்கை வெங்கட் பிரபு, ஆர்யா, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், வாணி போஜன், இரா.சரவணன், பாடலாசிரியர் விவேக் ஆகியோர், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினர். கிராண்ட் பிக்சர்ஸ் சார்பில் முரளி, கார்த்திக்.ஜி இணைந்து தயாரித்துள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் படம் திரைக்கு வருகிறது.