மீலாதுன் நபி பட பாடல் வெளியீடு
சென்னை: மீலாதுன் நபி ஆவணத் திரைப்படத்தின் பாடல்களை இசை அமைப்பாளர் காந்த் தேவா சென்னையில் வெளியிட்டார். அவர் கூறும்போது, ‘‘பாடல்கள் அனைத்தும் மிகவும் பக்தி பரவசத்துடன் இறைவனை நேரில் பார்த்து பாடும் போது வரும் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. இந்தப் படத்தின் பாடல்களை நண்பர் எஸ்.ஆர். ராம் இசையமைத்துள்ளார். மிகவும் புதுமையான முறையில் ஒரு சில இசைக்கருவிகளை வைத்து பாடல்களை மெல்லிசையாக தந்துள்ளார்’’ என்றார். பாடகர் சாகுல் அமீது சகோதரர் சம்சுதீன், நாகூர் ஹனிபாவின் மகன் நௌஷாத், ரஹீமா பேகம், பரிதா பாடியுள்ளனர். மில்லத் அகமது இயக்கியுள்ளார். வருகிற 31ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
