தற்கொலை தடுப்பு கதையில் மெகாலி
வரம் சினிமாஸ் சார்பில் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரிக்க, வெங்கட் ஜனா இயக்கியுள்ள ‘இறுதி முயற்சி’ என்ற படம், வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது. ரஞ்சித், மெகாலி மீனாட்சி, விட்டல் ராவ், கதிரவன், ராஜா, சத்குரு, குணா, சதீஷ், மோனிகா, நீலேஷ் நடித்துள்ளனர். சூரியகாந்தி ஒளிப்பதிவு செய்ய, சுனில் லாசர் இசையில் மாசூக் ரஹ்மான் பாடல்கள் எழுதியுள்ளார். அஜய் பிலிம் பேக்டரி சார்பில் அஜய் வெளியிடுகிறார். எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதை அழுத்தமாக சொல்லும் இப்படம் குறித்து மெகாலி மீனாட்சி கூறுகையில், ‘இப்படம் ஒரு கூட்டு முயற்சி.
அனைவரும் நன்கு ஒத்துழைத்தனர். படப்பிடிப்பில் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. சக நடிகர் ரஞ்சித் படப்பிடிப்பு தளத்தில் அக்கறையுடனும், அன்புடனும் நடந்துகொண்டார்’ என்றார். கொல்கத்தா வரவான அவர், குதிரை சவாரி செய்வார்; நீச்சலடிப்பார்; பாடல் எழுதுவார்; பாடுவார். கொரோனா லாக்டவுனில் தனது செல்போன் மூலம் குறும்படம் ஒன்றையும் இயக்கினார்.