முத்தமிட ஆர்வம் காட்டிய மெஹ்ரின்
தமிழில் ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’, ‘ஜெயிலர்’, ‘பொன் ஒன்று கண்டேன்’, ‘வெப்பன்’ ஆகிய படங்களை தொடர்ந்து வசந்த் ரவி நடித்துள்ள 7வது படம், ‘இந்திரா’. வரும் 22ம் தேதி திரைக்கு வருகிறது. சபரிஷ் நந்தா இயக்கத்தில் சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் கல்யாண் மாஸ்டர், சுனில், அனிகா சுரேந்திரன் நடித்துள்ளனர். வசந்த் ரவி ஜோடியாக மெஹ்ரின் பிர்சாடா நடித்துள்ளார். ‘சொப்பன சுந்தரி’ என்ற படத்துக்காக சில பாடல்களுக்கு இசை அமைத்திருந்த அஜ்மல் தஹ்சீன் இசை அமைத்துள்ளார். பிரபாகரன் ராகவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை பார்த்த சென்சார் குழுவினர், சில வசனங்களை மியூட் செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
வசந்த் ரவியும், மெஹ்ரின் பிர்சாடாவும் லிப்லாக் காட்சியில் நடித்துள்ளனர். அந்த போட்டோ ஏற்கனவே வைரலாகியிருந்த நிலையில், முத்தக்காட்சியில் நடிக்க ஆர்வத்துடன் முன்வந்த மெஹ்ரின் பிர்சாடாவை பற்றி படக்குழுவினர் பாராட்டியுள்ளனர். இயக்குனர் கூறுகையில், ‘கதைக்கு மிகவும் தேவைப்பட்ட நிலையில், லிப்லாக் பற்றி மெஹ்ரின் பிர்சாடாவிடம் சொன்னபோது, மறுப்பு சொல்லாமல் நடித்தார்’ என்றார். தெலுங்கு, கன்னடம், இந்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் நடித்துள்ள மெஹ்ரின் பிர்சாடா, தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘நோட்டா’, ‘பட்டாஸ்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.