மெமரி கார்டு விவகாரம்: ஸ்வேதா அதிரடி நடவடிக்கை
‘அம்மா’ என்கிற மலையாள நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்வேதா மேனன், புதிய நடிகர் சங்கத்தின் முதல் நிர்வாகக்குழு கூட்டத்தில், புதிய நிர்வாகிகளின் ஒப்புதலுடன் ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு ‘மீ டு’ பிரசாரம் சூடுபிடித்தது. அப்போது மலையாளப் படவுலகில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, நடிகர் சங்கத்திலுள்ள பெண் உறுப்பினர்களிடம் கருத்து கேட்க, அங்கிருந்த ஓட்டல் ஒன்றில் கூட்டம் நடத்தப்பட்டது.
அப்போது பெண் உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள் கேமராவில் பதிவு செய்யப்பட்டன. ஆனால், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அந்த மெமரி கார்டு காணாமல் போய்விட்டதாக, அப்போது பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் அலட்சியமாக சொன்னார்கள். இந்நிலையில், அந்த மெமரி கார்டு காணாமல் போனது குறித்து விசாரிக்க சிறப்புக்குழு ஒன்றை நியமித்துள்ள ஸ்வேதா மேனன், அதிரடி தீர்வு காண இருப்பதாக தெரிவித்துள்ளார்.