தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஆண்களின் கஷ்டத்தை சொல்வதில் என்ன தவறு? ரியோ ராஜ்

சென்னை: திரைக்கு வந்து வெற்றி பெற்ற ‘ஜோ’ என்ற படத்தின் ஜோடி ரியோ ராஜ், மாளவிகா மனோஜ். அவர்கள் மீண்டும் ஜோடி சேர்ந்த ‘ஆண் பாவம் பொல்லாதது’ என்ற படம், வரும் 31ம் தேதி வெளியாகிறது. கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார். ஆண்கள் படும் கஷ்டங்களை பற்றி பேசும் படமாக உருவாகியுள்ள இதற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

படம் குறித்து ரியோ ராஜ் கூறுகையில், ‘தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு, ‘இது பெண்களுக்கு எதிரான படமா?’ என்று கேட்கின்றனர். அப்படி இல்லை. இது பெண்களை பற்றி உயர்வாகவும், ஆண்கள் படும் கஷ்டங்களையும் பற்றியும் சொல்லும் படம். நானும், மாளவிகா மனோஜும் கணவன், மனைவி. எங்களுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் பிரிகிறோம்.

மீண்டும் இணைந்தோமா, கருத்து வேறுபாடுகள் களையப்படுகிறதா என்பது கதை. பல படங்களில் நான் நடித்துவிட்டேன். திடீரென்று ஒரு தயாரிப்பாளர், இதுதான் உங்கள் புதிய சம்பளம் என்று சொல்லி இன்ப அதிர்ச்சி தந்தார். எனவே, என் சம்பளத்தை நான் நிர்ணயிப்பது இல்லை’ என்றார்.