மெஸன்ஜர் அக்.31ல் ரிலீஸ்
சென்னை: பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் மெஸன்ஜர். இதில் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கன்னிமாடம், யுத்தகாண்டம் பாத்திரகாட் (மலையாளம்) போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார். கதாநாயகிகளாக மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி.
மெஸன்ஜர் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போன்றே படத்தின் டிரெய்லர் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும், படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மெஸன்ஜர் திரைப்படம் வருகிற அக்டோபர் 31ம் தேதி வெளியாகும். பால கணேசன், ஒளிப்பதிவு. பிரசாந்த், படத்தொகுப்பு. அபு பக்கர், இசை.