மிடில் கிளாஸ் தான் எனது கடைசி படம்! விஜயலட்சுமி திடீர் அறிவிப்பு
சென்னை: முனீஷ்காந்த், விஜயலட்சுமி ஜோடி சேர்ந்துள்ள படம், ‘மிடில் கிளாஸ்’. தேவ், கே.வி.துரை சேர்ந்து தயாரித்துள்ளனர். பிரணவ் முனிராஜ் இசை அமைத்துள்ளார். வரும் 21ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இதை கிஷோர் முத்துராமலிங்கம் எழுதி இயக்கியுள்ளார். படம் குறித்து விஜயலட்சுமி கூறியதாவது: எப்போதுமே நான் நடிகை என்று பந்தா செய்தது கிடையாது. கேரக்டர் மிகவும் பிடித்து இருந்தால், ஹீரோ யார் என்று பார்க்காமல் நடிப்பேன்.
‘மிடில் கிளாஸ்’ படத்தில், முனீஷ்காந்த் மனைவி வேடத்தில் நடித்தது மறக்க முடியாத ஒரு புதிய அனுபவமாக இருந்தது. சில காலமாக நான் நடிக்காததற்கு காரணம், எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் அமையவில்லை என்பதுதான். இனிமேல் நடிக்கக்கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன். ‘மிடில் கிளாஸ்’தான் எனது கடைசி படம். சினிமாவை தவிர்த்து வேறொரு துறையில் ஈடுபட திட்டமிட்டுள்ள நான், அதுகுறித்து விரைவில் அறிவிப்பேன்.
