உலகளவில் 535 மில்லியன் டாலர் வசூல் சூப்பர் மேன் சாதனை
சென்னை: உலக புகழ்பெற்ற டிசி ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த ஜூன் 11ம் தேதி வெளியான படம் ‘சூப்பர் மேன்’. ஜேம்ஸ் கன் இயக்கத்தில் டேவிட் கோரன்ஸ்வெட், ரேச்சல் ப்ரோஸ்னஹான் உள்பட பலர் நடிப்பில் வெளியானது. உலகம் முழுவதும் இதுவரை மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள இப்படம் தற்போது வரை 535 மில்லியன் டாலர் வசூலை அள்ளியுள்ளது. இதில் வட அமெரிக்காவில் மட்டும் 230 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் டிசி நிறுவனம் தயாரிப்பில் உலகளவில் அதிக வசூல் பெற்ற படங்களின் பட்டியலில் ‘சூப்பர் மேன்’ முதல் 10 இடங்களில் உள்ளது.
இந்த வசூல் கடந்த 2018ல் வெளியான ‘தி மெக்’ என்ற ஹாலிவுட் படத்தை விட அதிகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டிசி நிறுவனத்தின் போட்டி தயாரிப்பு நிறுவனமான வார்னர் ப்ரோஸ் தயாரித்த ‘தி மெக்’ 529 மில்லியன் டாலர் வசூல் பெற்றுள்ளது. அதை விட 6 மில்லியன் டாலர் அதிகமாக ‘சூப்பர் மேன்’ பெற்றுள்ளது. நீண்ட நாட்களாக தொய்வில் இருந்த டிசி நிறுவனத்திற்கு ‘சூப்பர் மேன்’ படம் ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.