தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

அதிகமாக வசனம் பேசாமல் நடித்த மிர்னா

  தூய்மையான காதலை மையப்படுத்தி ’18 மைல்ஸ்’ என்ற படம் உருவாகியுள்ளது. அசோக் செல்வன், மிர்னா ஜோடி சேர்ந்துள்ளனர். சதீஷ் செல்வகுமார் இயக்க, சித்து குமார் இசை அமைத்துள்ளார். விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல்கள் எழுதியுள்ளார். ஒரு அகதிக்கும், கடலின் சட்டத்தை இயற்றுபவருக்கும் இடையிலான பிணைப்பு, தியாகம், அன்பு மற்றும் இன்னும் பேசப்படாத பல உணர்வுகளை இப்படம்...

 

தூய்மையான காதலை மையப்படுத்தி ’18 மைல்ஸ்’ என்ற படம் உருவாகியுள்ளது. அசோக் செல்வன், மிர்னா ஜோடி சேர்ந்துள்ளனர். சதீஷ் செல்வகுமார் இயக்க, சித்து குமார் இசை அமைத்துள்ளார். விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல்கள் எழுதியுள்ளார். ஒரு அகதிக்கும், கடலின் சட்டத்தை இயற்றுபவருக்கும் இடையிலான பிணைப்பு, தியாகம், அன்பு மற்றும் இன்னும் பேசப்படாத பல உணர்வுகளை இப்படம் பேசுகிறது. ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் தனது நடிப்புத்திறமையை நிரூபித்த மிர்னா, இப்படத்தில் மேலும் தனது அழுத்தமான நடிப்பை வழங்கி இருக்கிறார். அன்புக்கும், அரவணைப்புக்கும் ஏங்கும் மனதை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மிர்னா கூறுகையில், ‘தனது முழுமையான நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு உண்மையான அங்கீகாரம் ஆகும்.

அந்த வகையில் மிகவும் ஆழமான, இளகிய, உண்மையான உணர்வுகளை நடிப்பில் கொண்டு வரவேண்டிய கதாபாத்திரம் இப்படத்தின் மூலம் எனக்கு கிடைத்துள்ளது. மவுனமாக இருந்தபடி, பெரும்பாலும் உணர்வுகளின் மூலமாக இதில் நான் நடித்துள்ளேன். வசனம் எல்லாம் அடுத்தபட்சம்தான். இந்த அற்புதமான வாய்ப்பை வழங்கிய இயக்குனருக்கு நன்றி. தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் சிறப்பாக வரவேண்டும் என்பதில் அசோக் செல்வன் தெளிவாக இருப்பார். அவரது டெடிகேஷன் எனக்கும் இன்ஸ்பிரஷேனாக இருந்தது. கிளிம்ப்சுக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளித்துள்ளது’ என்றார்.