மாடர்ன் லுக்கிற்கு மாறிய அஞ்சு குரியன்
நிவின் பாலி நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான ‘நேரம்’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சு குரியன். அதன்பிறகு, மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர் ‘ஜூலை காற்றில்’, ‘இஃக்லு’, ‘சென்னை டு சிங்கப்பூர்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்தாண்டு வெளியான ‘ஓஹோ எந்தன் பேபி’ மற்றும் ‘அதர்ஸ்’ என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்தாண்டு ரோஷன் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார். விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் அஞ்சு குரியன் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள போட்டோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் இம்முறை மாடர்ன் லுக்கில் அசத்தலான போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
