அதிகமாக தேடப்பட்ட திரிப்தி டிம்ரி
கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நடிகைகளில் திரிப்தி டிம்ரி முதல் இடத்தில் இருக்கிறார். கடந்த 2023ல் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் நடிப்பில் வெளியான இந்தி படம், ‘அனிமல்’. உலகம் முழுக்க இப்படம் 900 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதில் முக்கிய வேடத்தில் நடித்தவர், திரிப்தி டிம்ரி. பாலிவுட் நடிகையான அவர், கடுமையாக விமர்சிக்கப்பட்டதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இதற்கு முன்பு அவர் சில படங்களில் நடித்திருந்தாலும், ‘அனிமல்’ படம் அவரது வாழ்க்கையை மாற்றியது. பிறகு திரிப்தி டிம்ரிக்கு புதுப்பட வாய்ப்புகள் குவிந்தது. கடந்த ஆண்டு, ‘பேட் நியூஸ்’, ‘பூல் புலையா 3’ ஆகிய ஹிட் படங்களில் நடித்தார். தற்போது, சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ என்ற பான் இந்தியா படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். கடந்த ஆண்டு கூகுளில் அதிகமாக தேடப்பட்ட ஹீரோயின் என்ற அந்தஸ்தை திரிப்தி டிம்ரி பெற்றுள்ளார்.
