தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

அதிக படங்களில் நடிக்க மாட்டேன்: கல்யாணி பிரியதர்ஷன்

சென்னை: மலையாளத்தில் பஹத் பாசில், கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள ‘ஓடும் குதிரா சாடும் குதிரா’ என்ற படம், வரும் 29ம் தேதி திரைக்கு வருகிறது. மேலும், கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ‘லோகா’ என்ற படமும் அதே நாளில் வெளியாகிறது. இப்படங்களுக்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் கல்யாணி பிரியதர்ஷன் கூறுகையில், ‘தமிழில் கார்த்தியுடன் இணைந்து ‘மார்ஷல்’ என்ற படத்தில் நடித்து வருகிறேன்.

இப்படத்துக்காக நான் 4 மாதங்கள் கால்ஷீட் கொடுத்துள்ளேன். எனவே, அடுத்தடுத்த படத்தை ஒப்புக்கொள்ள மாட்டேன். ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு படங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஒரு படத்தில் ஒப்பந்தமானால், அதில் நடித்து முடித்த பிறகே அடுத்த படத்துக்கு கால்ஷீட் கொடுப்பேன். அப்போதுதான் அந்த கேரக்டரிலேயே முழு கவனத்தை செலுத்தி சிறப்பாக நடிக்க முடியும்’ என்றார்.