மொட்டை ராஜேந்திரனின் ராபின்ஹுட் டிரைலர் வெளியானது
சென்னை: லுமியர்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் ஜூட் மீனே, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா ஆகியோர் இணைந்து தயாரித்து அறிமுக இயக்குனர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில், மொட்டை ராஜேந்திரன் ஹீரோவாக நடிக்க, 1980களின் கிராமப்புற பின்னணியில், உருவாகியுள்ள திரைப்படம் ‘ராபின்ஹுட்’. இக்பால் அஸ்மி ஒளிப்பதிவு செய்து ஸ்ரீநாத் விஜய் இசையமைதுள்ளார்.
1980 களில், கிராமத்தில் ஒரு லாட்டரி சீட்டில் பெரிய பரிசு விழ, அந்த பரிசுக்காக இருவருக்கு இடையே நிகழும் போட்டியும், பிரச்சனைகளும் தான் இப்படத்தின் மையம். நாம் மறந்து போன லாட்டரி சீட்டு காலத்தை, கிராமப்புற பின்னணியில் மீட்டெடுத்து, கலகலப்பான திரைக்கதையுடன் அனைவரும் ரசிக்கும் வகையில் இயக்கியுள்ளார் கார்த்திக் பழனியப்பன். இதன் படப்பிடிப்பு அருப்புகோட்டை, காரியாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நடத்தப்பட்டது.
நேற்று முன்தினம் வெளியான இதன் டிரைலரை பார்த்த இயக்குனர் ஹெச்.வினோத் படம் குறித்து கூறியதாவது, ‘‘படத்தின் பின்னணி, விஷுவல்கள் பிரமாதமாக உள்ளது. காமெடி அருமையாக உள்ளது. இசை படத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளது. டிரெய்லர், படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.
