படத்துக்காக குடிப்பதை நிறுத்திய விக்கி கவுஷல்
மும்பை: புராண கதை கொண்ட இந்தி படத்தில் நடிப்பதற்காக, குடிப்பதை நிறுத்திவிட்டார் விக்கி கவுஷல். விஷ்ணுவின் 6வது அவதாரமான பரசுராமர் பற்றிய கதை ‘மகாவதார்’ என்ற பெயரில் படமாகிறது. ‘ஸ்திரீ 2’ அமர் கவுஷிக் இயக்குகிறார்.
பிரமாண்டமாக உருவாகும் இதில் விபிஎக்ஸ் பணிகளுக்காக 6 மாதங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் நடிக்கும் விக்கி கவுஷல், இயக்குனர் அமர் கவுஷிக் ஆகியோர் அசைவம் சாப்பிடுவது மற்றும் மது பழக்கத்தை நிறுத்திவிட்டனர் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
