தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

யூடியூபர்கள் உருவாக்கிய மிஸ்டர் பாரத்

சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வழங்க, பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஜி ஸ்குவாட், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம், ‘மிஸ்டர் பாரத்’. பிரபல யூடியூபர்கள் பாரத், நிரஞ்சன் ஆகியோர், முழுநீள திரைப்படமான ‘மிஸ்டர் பாரத்’ மூலம் அறிமுகமாகின்றனர். லோகேஷ் கனகராஜ், பாரத், நிரஞ்சன் ஆகியோர் இணைந்த கிளிம்ஸ் வீடியோ ரசிகர்களிடம்...

சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வழங்க, பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஜி ஸ்குவாட், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம், ‘மிஸ்டர் பாரத்’. பிரபல யூடியூபர்கள் பாரத், நிரஞ்சன் ஆகியோர், முழுநீள திரைப்படமான ‘மிஸ்டர் பாரத்’ மூலம் அறிமுகமாகின்றனர். லோகேஷ் கனகராஜ், பாரத், நிரஞ்சன் ஆகியோர் இணைந்த கிளிம்ஸ் வீடியோ ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் குறித்து பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் கூறுகையில், ‘இளம் குழு என்பதாலேயே அவர்களது தெளிவு, திட்டமிடல், அர்ப்பணிப்பு ஆச்சரியப்படுத்தியது.

கதை பெரிதும் ஈர்த்தது. சரியான நேரத்துக்கு படப்பிடிப்பை முடித்தனர்’ என்றார். லோகேஷ் கனகராஜ், சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் தயாரித்துள்ளனர். முக்கிய வேடங்களில் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர்.சுந்தர்ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் நடித்துள்ளனர். ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்ய, பிரனவ் முனிராஜ் இசை அமைத்துள்ளார். திவாகர் டெனிஸ் எடிட்டிங் செய்ய, பாவ்னா கோவர்தன் அரங்கம் அமைத்துள்ளார்.