மிருதன் 2ம் பாகம் வருகிறது
சென்னை, ஆக.6: ஜெயம் ரவி, லட்சுமி மேனன், அனிகா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘மிருதன்’. இந்த படத்தின் கதை, ஜோம்பிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அந்த படத்தின் இறுதி காட்சியில் நாயகியை காப்பாற்ற நாயகனும் ஜோம்பியாக மாறுவது போல கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தை சக்தி சவுந்தரராஜன் இயக்கியிருந்தார். இப்படத்தின் இறுதியில்...
இந்நிலையில் சுமார் 8 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது உறுதியாகியுள்ளது. விரைவில் இந்த படம் தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் நடித்தபடி தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஜெயம் ரவி நடிக்க உள்ளார்.