எம்.ஆர்.ராதா தான் மாஸ்க் பட ஆன்மா: வெற்றி மாறன் பேச்சு
சென்னை: தி ஷோ மஸ்ட் கோ ஆன், பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் சார்பில் ஆண்ட்ரியா ஜெரேமியா, எஸ்.பி.சொக்கலிங்கம் தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் மேற்பார்வையில், கவின் ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா, ரெடின் கிங்ஸ்லி, பவன் நடித்துள்ள படம், ‘மாஸ்க்’. வரும் 21ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை விகர்ணன் அசோக் எழுதி இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலைப்புலி எஸ்.தாணு, பைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன், சுப்பிரமணியம் சிவா கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினர் விஜய் சேதுபதி பேசும்போது, ‘டிரைலரை பார்த்தேன், மிகவும் பிடித்திருந்தது. மாஸ்க் கதை, எம்.ஆர்.ராதா என்று ஒவ்வொரு ஐடியாவும் சிறப்பாக இருக்கிறது. கவினுக்கு வாழ்த்துகள். ஜி.வி.பிரகாஷின் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது இசையில் நடிக்க காத்திருக்கிறேன்’ என்றார். வெற்றிமாறன் பேசுகையில், ‘எம்.ஆர்.ராதா சார் ஒரு ரிபெல், அவர் நிறைய விஷயங்களை பேசியிருக்கிறார். அவர் இந்த படத்திற்குள் வந்தது மிகவும் மகிழ்ச்சி. ராதாரவி சாரிடம் அனுமதி கேட்டேன். நன்றாக காட்டுவீர்கள் என்றால் ஓ.கே என்று சொன்னார். அவருக்கு நன்றி. எம்.ஆர்.ராதா பேசிய விஷயம்தான் இப்படத்தின் ஆன்மா. குரலற்றவர்களின் குரல்தான் படம்’ என்றார்.
