இசையமைப்பாளருடன் நடிகை ரொமான்ஸ்
‘பிலால்பூர் போலீஸ் ஸ்டேஷன்’, ‘புஷ்பக விமானம்’ போன்ற தெலுங்கு படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சான்வி மேகனா. இதனைத் தொடர்ந்து ‘மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர்’, ‘நானே சரோஜா’, ‘பிரேமா விமானம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் இந்த ஆண்டு வெளியான ‘குடும்பஸ்தன்’ என்ற படத்தில் நடிகர் மணிகண்டனுக்கு ஜோடியாக அறிமுகமானார். படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் பெரிதளவில் பேசப்படும் நடிகையாக மாறி வருகிறார். தமிழில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் குடியேறிவிட்டார் சான்வி மோகனா.
சமீபத்தில் சாய் அபயங்கர் இசையமைத்த ‘விழி வீக்குற’ என்ற ஆல்பம் பாடலில் அவருடன் சேர்ந்து நடனம் ஆடியிருந்தார். இந்த பாடலில் அவரது கியூட்டான நடனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சாய் அபயங்கர் - சான்வி மோகனாவின் கெமிஸ்ட்ரி மற்றும் ரொமான்ஸ் நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருப்பதாக ரசிர்கர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் சான்வி மோகனா சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ‘விழி வீக்குற’ படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதில், இந்த பாடலுக்காக ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சூரியகாந்தி தோட்டத்தில் எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார் சான்வி மேகனா.