என் சாம்பியனுக்கு அருகில் இருக்கிறேன்: ஷாலினி அஜித் பதிவு வைரல்
சென்னை: துபாய், பெல்ஜியம் நாடுகளை தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார் அஜித்குமார். இங்கு அஜித்குமார் ரேஸிங் சார்பில் நான்கு போட்டிகளில் பங்கேற்கிறார். இந்த மாதம் இரண்டு அடுத்த மாதம் இரண்டு என நான்கு போட்டிகள் அங்கு நடைபெறுகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் அஜித் அணி மூன்றாவது இடத்தை பிடித்து சாதித்தது. சோஷியல் மீடியாவில் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினரின் அழகிய புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது. இதனைத்தொடர்ந்து அஜித்தின் மனைவியும் பிரபல நடிகையுமான ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்பெயினில் அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
‘‘என் சாம்பியனுக்கு அருகில் இருக்கின்றேன்’’ என கேப்ஷன் போட்டு ஷாலினிஅந்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கின்றார். இது வைரலாகியுள்ளது. அஜித் தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் மிக முக்கியமான கார் பந்தயத்தில் கலந்துகொண்டு வருகின்றார். இந்த முக்கியமான நேரத்தில் அஜித்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஷாலினி ஸ்பெயின் நாட்டிற்கு புறப்பட்டு சென்றிருக்கின்றார். தன் குடும்பம் அருகில் இருப்பதால் அஜித் இன்னும் நம்பிக்கையாக கார் ரேஸில் கலந்துகொண்டு மேலும் பல வெற்றிகளை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.