தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

விஷால் திருமணத்தில் மிஷ்கின் பங்கேற்பாரா

  சென்னை: சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனரும், நடிகருமான மிஷ்கின், விஷால் திருமணம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘விஷால் திருமணத்துக்கு அவர் என்னை அழைக்கவில்லை என்றாலும், சற்று ஒதுங்கி நின்றாவது அவருக்காக நான் பிரார்த்தனை செய்வேன். தெருநாய் பிரச்னைக்கு நன்கு படித்தவர்கள் கலந்தாலோசித்து சரியான முறையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இளையராஜா...

 

சென்னை: சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனரும், நடிகருமான மிஷ்கின், விஷால் திருமணம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘விஷால் திருமணத்துக்கு அவர் என்னை அழைக்கவில்லை என்றாலும், சற்று ஒதுங்கி நின்றாவது அவருக்காக நான் பிரார்த்தனை செய்வேன். தெருநாய் பிரச்னைக்கு நன்கு படித்தவர்கள் கலந்தாலோசித்து சரியான முறையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இளையராஜா நமக்கெல்லாம் தாய், தந்தை மாதிரி. அவரது பாடல் தாய்ப்பாலுக்கு நிகரானது’ என்றார். ‘துப்பறிவாளன்’ படத்தில் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்திருந்தார்.

இதையடுத்து ‘துப்பறிவாளன் 2’ படத்தில் மீண்டும் அவர்கள் இணைந்து பணியாற்றியபோது, படத்தின் பட்ஜெட் தொடர்பாக ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக, அப்படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கப்பட்டார். இப்படத்தை தானே இயக்கி நடிப்பேன் என்று சொன்ன விஷால், இன்னும் ஷூட்டிங்கை தொடங்கவில்லை. தற்போது ரவி அரசு இயக்கும் ‘மகுடம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கும், சாய் தன்ஷிகாவுக்கும் வரும் அக்டோபர் மாதம் திருமணம் நடக்கிறது. கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.