மிஷ்கினை மயக்கிய மாளவிகா மனோஜ்
கலையரசன் தங்கவேல் எழுதி இயக்கி, இன்று திரைக்கு வந்துள்ள படம், ‘ஆண் பாவம் பொல்லாதது’. இதில் ‘ஜோ’ என்ற படத்துக்கு பிறகு மீண்டும் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படம் குறித்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனரும், நடிகருமான மிஷ்கின், ‘ஆண் பாவம் என்ற வார்த்தையே, பாண்டியராஜன் படம் இயக்கி நடித்தபோதுதான் எங்களுக்கு தெரியவந்தது. அப்போது அந்த வார்த்தை எங்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. இத்தனை வருடங்கள் கழித்து இந்த குழு ‘பொல்லாதது’ என்பதை கூடுதலாக சேர்த்து, ‘ஆண் பாவம் பொல்லாதது’ என்று படமாக்கியுள்ளனர். இதன் தயாரிப்பாளர் எனது நண்பர்.
‘இந்த படம் உங்களை சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கும். ஆனால், கடைசியில் அழவைத்து விடும்’ என்று சொன்னார். ஒரு தயாரிப்பாளர் இந்தளவு இயக்குனரை நம்புவது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. படக்குழுவினர் அதற்கான கடும் உழைப்பை வழங்கியுள்ளனர். டைட்டில் டிசைனே அழகாக இருக்கிறது. படமும் கண்டிப்பாக நன்றாக இருக்கும் என்று தெரிகிறது. மாளவிகா மனோஜை பார்க்க பக்கத்து வீட்டு பெண் போல் சாந்தமாக இருக்கிறார். ரியோ ராஜ், இனி ரியோ என்று ெபயர் மாற்றலாம். லியோ மாதிரி, ரியோ அழகாக இருக்கிறது. அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது’ என்றார்.
 
 