நாகார்ஜுனா பெயரில் ஆபாச இணையதளம்: டெல்லியில் வழக்கு தொடுத்தார்
புதுடெல்லி: நாகார்ஜுனாவின் புகைப்படத்தை க்ளிக் செய்தால் ஆபாச இணையதளத்துக்கு செல்லும் மோசடி நடப்பதாக அவரது தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தனியுரிமை பாதுகாக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி தேஜஸ் கரியா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நாகார்ஜுனாவின் வக்கீல், ‘‘சில இணைய பக்கத்தில் நாகர்ஜுனாவின் படம் போடப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்தால் அது ஆபாச இணையதளத்துக்கு செல்கிறது. அதேபோல சில ஆடை விளம்பரங்கள் கூட இவரின் புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன மேலும் AI மூலம் உருவாக்கப்பட்ட காட்சிகள் சில விளம்பரங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. டி-ஷர்ட் மற்றும் பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து அதனை விற்பனை செய்வது உள்ளிட்ட செயல்பாடுகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இது தனது தனியுரிமையை பாதிப்பதாக உள்ளது’’ என வாதிட்டார். வாதங்களைக் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இவ்வழக்கில் உரிய உத்தரவுகளை விரைவில் பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.