தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா

சென்னை: ஏ.ஆர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் அஜ்மல் கான், ரியா ஹரி இணைந்து தயாரிக்க, லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடித்துள்ள ‘லெவன்’ என்ற கிரைம் திரில்லர் படத்தின் டிரைலரை கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். முக்கிய வேடங்களில் ரியா ஹரி, அபிராமி, ‘வத்திக்குச்சி’ திலீபன், ரித்விகா, ‘ஆடுகளம்’ நரேன் நடித்துள்ளனர். கார்த்திக் அசோகன்...

சென்னை: ஏ.ஆர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் அஜ்மல் கான், ரியா ஹரி இணைந்து தயாரிக்க, லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடித்துள்ள ‘லெவன்’ என்ற கிரைம் திரில்லர் படத்தின் டிரைலரை கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். முக்கிய வேடங்களில் ரியா ஹரி, அபிராமி, ‘வத்திக்குச்சி’ திலீபன், ரித்விகா, ‘ஆடுகளம்’ நரேன் நடித்துள்ளனர். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார். தமிழக வெளியீட்டு உரிமையை சுஷ்மா சினி ஆர்ட்ஸ்சின் ஜி.என்.அழகர்சாமி, தெலுங்கு உரிமையை ருச்சிரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்சின் என்.சுதாகர் ரெட்டி, மலையாள உரிமையை இ4 எண்டர்டெயின் மெண்ட்சின் முகேஷ் ஆர்.மேத்தா, கர்நாடக உரிமையை ஃபைவ் ஸ்டார் கே.செந்தில் பெற்றுள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நவீன் சந்திரா பேசுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ‘சரபம்’ என்ற தமிழ் படத்தில் ஹீரோவாக நடித்தேன்.‌ இப்போது ‘லெவன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளேன். வரும் 16ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் படம் ரிலீசாகிறது.‌ அபிராமி, ரியா ஹரி ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை என்னால் மறக்க முடியாது’ என்றார்.