தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி, ‘நாயகன்’ திரைப்படம் ரீரிலீஸ் ஆகவுள்ளது.

 

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் திரைப்படம் நவம்பர் 6ம் தேதி ரீரிலீஸ் ஆகவுள்ளது. நவம்பர் 7-ம் தேதி கமல்ஹாசன் தனது 71-வது பிறந்த நாளை முன்னிட்டு நாயகன் படம் ரீரிலீஸ் ஆகிறது.

பழைய படங்கள் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் ட்ரெண்டில் இணைந்துள்ளது ‘நாயகன்’. நவம்பர் 6-ம் தேதி இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. நவம்பர் 7-ம் தேதி கமல்ஹாசன் தனது 71-வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். இதனை முன்னிட்டு ‘நாயகன்’ ரீரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான மெருக்கேற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் ‘நாயகன்’. 1987-ம் ஆண்டு வெளியான இப்படம் பெருமளவில் கொண்டாடப்பட்டது. இப்போது இப்படத்தினை கல்ட் க்ளாஸிக் என்று கொண்டாடி வருகிறார்கள். இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்களும் இதன் வெற்றிக்கு ஒரு காரணம்.