ஆக்ஷன் வேடத்தில் நயன்தாரா
சென்னை:கடந்த 2019ல் மலையாளத்தில் வெளியான ‘லவ் ஆக்ஷன் டிராமா’ என்ற படத்துக்கு பிறகு நிவின் பாலி, நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம், ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’. பள்ளி வாழ்க்கையின் வண்ண மயமான வாழ்க்கையையும், பரபரப்பான உலகத்தையும் சுட்டிக்காட்டும் இப்படத்தின் கதை, மாணவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
நிவின் பாலி, நயன்தாரா, ரெடின் கிங்ஸ்லி, ‘ஆடுகளம்’ முருகதாஸ், சரத் ரவி, உதய் மகேஷ், வெட்டை முருகன், ஜெயகுமார் ஜானகிராமன், விஜய் சத்யா, மாத்யூ வர்கீஸ், ‘ராஜா ராணி’ பாண்டியன், தீப்தி, கீரண் கொண்டா, காமருதீன்.கே, அஜு வர்கீஸ், ஷரஃபுதீன், சுரேஷ் கிருஷ்ணா, மல்லிகா சுகுமாரன், லால், ஜகதீஷ், ஜானி ஆண்டனி நடித்துள்ளனர். ஜார்ஜ் பிலிப் ராய், சந்தீப் குமார் எழுதி இயக்கியுள்ளனர். மேவரிக் மூவிஸ், பாலி ஜூனியர் பிக்சர்ஸ், ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளன. வலிமையான போலீஸ் அதிகாரி கேரக்டரில், ஆக்ஷன் காட்சிகளில் நயன்தாரா நடித்துள்ளார்.