தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

டொவினோ தாமஸ் ஜோடியாக நஸ்ரியா

 

மலையாள முன்னணி நடிகர் டொவினோ தாமஸ், தமிழில் ‘மாரி’ என்ற படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்தார். 2021ல் மலையாளத்தில் வெளியான ‘மின்னல் முரளி’ என்ற சூப்பர் ஹீரோ படத்தின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்த அவர், தனது வித்தியாசமான கதாபாத்திர தேர்வு மற்றும் தனித்துவமான நடிப்பால் மலையாள ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கிலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் ‘எல் 2: எம்புரான்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அவர், சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘நரிவேட்டா’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இப்படத்துக்காக சிறந்த ஆசிய நடிகருக்கான செப்டிமஸ் விருதை அவர் வென்றார். நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாமில் வழங்கப்படும் இந்த விருது, உலக அளவில் மதிப்பு மிகுந்த விருதாக கருதப்படுகிறது. சமீபத்தில் வெளியான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ என்ற படத்தில் மைக்கேல் என்ற கேமியோ ரோலில் அவர் நடித்திருந்தார். தற்போது டொவினோ தாமஸ், நஸ்ரியா நாசிம் இருவரும் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். ‘வைரஸ்’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘தள்ளுமலா’ ஆகிய படங்களுக்கு கதை எழுதியிருந்த முஷின் பராரி இயக்குகிறார். டொவினோ தாமஸுடன் முதல்முறையாக நஸ்ரியா நாசிம் ஜோடி சேர்ந்துள்ளதால், இப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.