புதிய படத்தில் மீண்டும் இணையும் ஜென்ம நட்சத்திரம் டீம்
கதாநாயகனாக நடிக்கும் நடிகர் தமன் அக்ஷன் படத்தின் கதை மற்றும் திரைக்கதை எழுதியிருக்கிறார். சென்னை மற்றும் டெல்லியில் படமாக்கப்பட இருக்கும் இந்தப் படம் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது. திட்ட இயக்குநராக விஜயன் ரங்கராஜன், சி.இ.ஒ. டி செல்வகுமார் மற்றும் கிரியேடிவ் ஹெட் பணியை ஈரோடு மகேஷ் ஆகியோர் கவனிக்கின்றனர். இந்தப் படம் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விரைவில் இந்தப் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் அறிவிக்கப்பட இருக்கிறது. இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இந்த கிரைம் திரில்லர் படத்தில் எமோஷனல், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாரா திருப்பங்கள் நிறைந்த கதையாக இந்தப் படம் உருவாகி வருகிறது.