புதிய கருத்தை சொல்லும் சரீரம்
சென்னை: ஜி.வி.பி. பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி.வி.பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் ‘சரீரம்’. இப்படம் வரும் செப்டம்பர் 26ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
கடவுள் ஒவ்வொருவருக்கும் தந்த தனிக் கொடை தான் ‘சரீரம்’. அதன் அருமை யாருக்கும் புரிவதில்லை, தன் சரீரத்தை மாற்றிக்கொள்ளும் உரிமை எவருக்குமில்லை, இந்த கருத்தை ஆழமாக பேசும் படைப்பாகவும் இளமை துள்ளும் காதல் படைப்பாகவும் இப்படத்தை எழுதி தயாரித்து உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் ஜி.வி.பெருமாள்.
இப்படத்தில் ஜே.மனோஜ், பாய்ஸ் புகழ் ராஜன், ஷகீலா, மதுமிதா, புதுப்பேட்டை சுரேஷ், கௌரி, லில்லி, மிலா ஆகியோருடன் இயக்குநர் ஜி.வி.பெருமாள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வி.டி. பாரதிராஜா இசையில், விஜய் ஆனந்த், குமரவேலன் வேதகிரி பாடல்கள் எழுதியுள்ளனர்.