சோனியா இல்லை: செல்வராகவன் கைவிரிப்பு
விஷ்ணு விஷால், ஸ்ரத்தா நாத், மானசா சவுத்ரி நடித்த ‘ஆர்யன்’ படம் வெற்றிபெற்றுள்ள நிலையில் நேற்று நடந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனரும், நடிகருமான செல்வராகவன், ‘சோகமான முடிவுகளை கொண்ட கிளைமாக்ஸ் காட்சிகளை ஏஐ மூலம் சிலர் மாற்றுகின்றனர். இப்படி மாற்றுவது இந்தியாவிலும், ஹாலிவுட்டிலும் நடக்கிறது. இது தவறு. படம் ரிலீசானதும் அதில் இருப்பதை அப்படியே விட்டுவிட வேண்டும். எந்த கிளைமாக்ஸை வைத்திருந்தோமோ, அது அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட வேண்டும்.
எதற்காகவும் அதை மாற்றக்கூடாது. எனது லைஃப்பில் அனிதா (சோனியா அகர்வால்) இல்லை. ஆனால், அவர் இருக்கிறார். அதாவது, ‘7/ஜி ரெயின்போ காலனி 2’ படத்தில் இருக்கிறார். அப்படத்துக்கான பணிகள் இன்னும் முடியவில்லை. அப்படத்தை எதற்காக நான் இயக்குகிறேன் என்று தெரிந்துகொள்ள அதிக ஆர்வம் இருக்கும். அதனால்தான் 2ம் பாகத்தை இயக்க சம்மதித்தேன். ‘புதுப்பேட்டை 2’ படத்தையும் விரைவில் இயக்குவேன். ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ பற்றி அதன் ஹீரோ கார்த்திக்கு போன் செய்து கேட்கிறேன். அவர் நடிக்க ஓ.கே சொன்னால், நானும் படம் இயக்க ஓ.கே சொல்வேன்’ என்றார்.
