புதியவர்களுக்கு வாய்ப்பு தர மூவி மேக்கர்ஸ் கிளப்
துபாய், நவ.26: அமீரகம் முழுவதிலும் உள்ள சினிமா துறையில் ஆர்வம் உள்ள திறன் படைத்த புதியவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க மூவி மேக்கர்ஸ் கிளப் என்ற சிறப்பு தளம் அதன் நிறுவனர் ஜி. பாபு ராமகிருஷ்ணன் தலைமையில் துவங்கப்பட்டது. நடிப்பு, இயக்கம் மற்றும் திரைப்படத் துறையின் பல்வேறு பகுதிகளில் திறமைகளை மேம்படுத்தவும், புதிய திறமைகளை கண்டறியவும் இந்த முயற்சி உருவாக்கப்பட்டுள்ளது.
நிகழ்வுக்கு தமிழகத்தில் இருந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசையமைப்பாளர் சிற்பி, நடிகர் பகவதி பெருமாள் (பக்ஸ்), நடிகை சவுமியா மேனன், அமீரக நடிகர் அப்துல்லா அல் ஜஃப்ஃபாலி உள்ளிட்டோர் மற்றும் முத்தமிழ் சங்கம், ஈமான் சங்கத்தினர் மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
