தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

வாழ்க்கை புதிரை சொல்லும் தோற்றம்

சென்னை: இளங்கோ சினி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள படம், ‘தோற்றம்’. இதில் இள.பரத், வசுந்தரா, ‘பருத்திவீரன்’ சரவணன், ராஜா அம்மையப்பர், விஜு ஐயப்பன், பெஞ்சமின், தீபக், ஜாலி மணி, ஹரிஷ், மெர்லின், ஷபானா நடித்துள்ளனர். கதை, திரைக்கதை எழுதி ஏ.தமிழ்ச்செல்வன் இயக்கியுள்ளார். சம்பத்குமார் ஒளிப்பதிவு செய்ய, நல்லதம்பி இசை அமைத்துள்ளார். முத்து கொட்டப்பா எடிட்டிங் செய்துள்ளார். வாழ்க்கையில்...

சென்னை: இளங்கோ சினி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள படம், ‘தோற்றம்’. இதில் இள.பரத், வசுந்தரா, ‘பருத்திவீரன்’ சரவணன், ராஜா அம்மையப்பர், விஜு ஐயப்பன், பெஞ்சமின், தீபக், ஜாலி மணி, ஹரிஷ், மெர்லின், ஷபானா நடித்துள்ளனர். கதை, திரைக்கதை எழுதி ஏ.தமிழ்ச்செல்வன் இயக்கியுள்ளார். சம்பத்குமார் ஒளிப்பதிவு செய்ய, நல்லதம்பி இசை அமைத்துள்ளார். முத்து கொட்டப்பா எடிட்டிங் செய்துள்ளார். வாழ்க்கையில் அடுத்த விநாடி என்ன நடக்கிறது என்பது புரியாத புதிர். இதுதான் வாழ்க்கை ரகசியம். அனைவரும் இந்த புதிரான விளையாட்டில் சிக்கி, வெளியே வர முடியாமல் போராடிக் கொண்டிருக்கின்றனர். இப்படி சாமானிய மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக்கி படம் உருவாகியுள்ளது. தனது மகளின் திருமணத்துக்கு தங்க நகை வாங்குவதற்காக கிராமத்தில் இருந்து நகரத்துக்கு செல்லும் ஒரு பெரியவர், திடீரென்று எதிர்கொள்ளும் பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறார் என்பது திரைக்கதை. இப்படம், வரும் ஜூலை 11ம் தேதி திரைக்கு வருகிறது.