தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஆஸ்கர் வென்றவருடன் இணையும் பிரபாஸ்

பான் இந்தியா நடிகர் பிரபாஸ், தன் கைவசத்தில் ‘தி ராஜாசாப்’, ‘ஃபௌஜி’, ‘ஸ்பிரிட்’, ‘கல்கி ஏ.டி.2898’ 2ம் பாகம்’ ஆகிய படங்கள் உள்ளன. இந்த வரிசையில் பிரபாஸ் அடுத்து நடிப்பதற்கான புதிய படத்தை ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த புதிய படத்தை தெலுங்கு சினிமாவில் பிரபல நடன இயக்குனர் பிரேம் ரக்சித் என்பவர் இயக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல். பிரேம் ரக்சித், நடன இயக்குனராக பணியாற்றிய ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவர் தமிழில் ‘அழகிய தமிழ்மகன்’, ‘சுறா’, ‘வேலாயுதம்’ ஆகிய படங்களிலும் ஒரு சில பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். தற்போது பிரபாஸ் தான் நடித்துவரும் படங்களை முழுவதுமாக முடித்த பிறகே பிரேம் ரக்சித் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி என்றால் 2027ம் ஆண்டு இறுதி அல்லது 2028ல் தான் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.