ஆஸ்கர் நூலகத்தில் சன் பிக்சர்ஸின் ராயன் திரைக்கதை
சென்னை: சன் பிக்சர்ஸ் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துள்ள படம், ‘ராயன்’. தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இப்படம், கடந்த ஜூலை 26ம் தேதி திரைக்கு வந்து, அனைத்து தரப்பு ரசிகர்களின் பேராதரவுடன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. தனுஷ் நடித்துள்ள 50வது படமான இதில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா, தனுஷின் தம்பிகளாக...
இந்நிலையில், ‘ராயன்’ படத்தின் திரைக்கதை, அகாடமி மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் நூலகத்துக்கு தேர்வாகியுள்ளது என்று, சன் பிக்சர்ஸ் தனது எக்ஸ் தளத்தின் மூலம் அறிவித்துள்ளது. ‘ராயன்’ திரைக்கதை தேர்வான தகவல் வைரலானதை தொடர்ந்து, தனுஷுக்கு அவரது ரசிகர்களும், நெட்டிசன்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.