தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஓடிடியில் வெளியாகும் ‘லோகா’, ‘காந்தாரா’

மலையாளத்தில் நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் டொமினிக் அருண் இயக்கிய ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ என்ற படத்தில், சூப்பர் வுமன் கேரக்டரில் கல்யாணி பிரியதர்ஷன் சிறப்பாக நடித்திருந்தார். மற்றும் ‘பிரேமலு’ நஸ்லென் கே.கபூர், நடன இயக்குனர் சாண்டி, டொவினோ தாமஸ் நடித்திருந்தனர். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்று, 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனை படைத்தது. இதன் 2ம் பாகம், டொவினோ தாமஸ் கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாகிறது. இந்நிலையில், ஜியோ ஹாட்ஸ்டாரில் இப்படம் வரும் 31ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘காந்தாரா’ என்ற படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் முந்தைய கதையை மையப்படுத்தி உருவான ‘காந்தாரா எ லெஜண்ட்: சாப்டர் 1’ என்ற படத்தை ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கி நடித்திருந்தார். மற்றும் ருக்மணி வசந்த், குல்ஷன் தேவய்யா, ஜெயராம் நடித்த இப்படத்துக்கு பி.அஜனீஷ் லோக்நாத் இசை அமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, இதுவரை 800 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஆங்கிலத்தில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இப்படம், வரும் 31ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இந்நிலையில், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘காந்தாரா ஏ லெஜண்ட்: சாப்டர் 1’ என்ற படம், வரும் 31ம் தேதி இந்திய மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.