தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஓடிடியில் வெளியாகும் ‘ஸ்டீபன்’

தான் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்ட தொடர்கொலையாளியை, மனநல மருத்துவர் ஒருவர் மதிப்பிடுகிறார். இதன்மூலம் அதிர்ச்சி, வஞ்சகம் மற்றும் உளவியலை கையாளுதல் ஆகியவற்றின் வலையை அவிழ்க்கிறார். அந்த கொலையாளி உண்மையிலேயே குற்றவாளியா அல்லது இருண்ட விளையாட்டில் பாதிக்கப்பட்ட மற்றொருவரா என்ற கேள்வி எழுகிறது. மிதுன் பாலாஜி இயக்கியுள்ள ‘ஸ்டீபன்’ படத்தின் கதை இது. அவர் கூறுகையில், ‘கதை ஒரு அமைதியான, கால்குலேட்டட் தொடர் கொலையாளியை பற்றியது.

அவர் அமைதியற்ற தனிப்பட்ட ரகசியங்களை சுமந்து கொண்டிருக்கிறார். முதன்மை கதாபாத்திரத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்து கோமதி சங்கர் நடித்துள்ளார். இந்த படம் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தது. உண்மைக்கு மிக நெருக்கமாகவும், அக்கறையுடனும் படமாக்கியுள்ளேன். இதுபோன்ற ஜானரில் கதை சொல்ல அனுமதித்த நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு எனது நன்றி’ என்றார். எழுத்தாளரும், நடிகருமான கோமதி சங்கர் கூறும்போது, ‘குற்றங்களுக்கு பின்னால் இருக்கும் மனிதனை ஆழ்ந்து பார்க்கும் ஒரு படமாக ‘ஸ்டீபன்’ உருவாகியுள்ளது’ என்றார்.