தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

அத்துமீறிய போட்டோகிராபர்கள் அலியா பட் ஆவேசம்

  மும்பை: அதிக சம்பளம் வாங்கும் பாலிவுட் முன்னணி நடிகை அலியா பட், தற்போது ‘ஆல்பா’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான ‘ஜிக்ரா’ என்ற படம் தோல்வி அடைந்தது. தற்போது ‘ஆல்பா’ படப்பிடிப்பில் சிறிது இடைவெளி ஏற்பட்ட நிலையில், வீட்டில் அலியா பட் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில்தான் போட்டோகிராபர்கள் மீது...

 

மும்பை: அதிக சம்பளம் வாங்கும் பாலிவுட் முன்னணி நடிகை அலியா பட், தற்போது ‘ஆல்பா’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான ‘ஜிக்ரா’ என்ற படம் தோல்வி அடைந்தது. தற்போது ‘ஆல்பா’ படப்பிடிப்பில் சிறிது இடைவெளி ஏற்பட்ட நிலையில், வீட்டில் அலியா பட் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில்தான் போட்டோகிராபர்கள் மீது அவர் கோபத்தை வெளிப்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

டென்னிஸ் விளையாட வந்த அலியா பட், காரில் இருந்து இறங்கியவுடன் போட்டோகிராபர்களால் சூழப்பட்டார். அவரை போட்டோ எடுக்க பின்னாடியே விரட்டிக்கொண்டு சென்றனர். அலியா பட் அந்த கட்டிடத்துக்கு உள்ளே சென்றபோது, அவருடன் சேர்ந்து சில போட்டோகிராபர்களும் சென்றனர். அவர்களின் செயலை பார்த்து ஆவேசம் அடைந்த அலியா பட், ‘இங்கு உள்ளே வராதீர்கள். தயவுசெய்து வெளியே செல்லுங்கள். இது உங்கள் வீடு அல்ல’ என்று கத்தினார். அந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், ‘திரையுலக பிரபலங்களை போட்டோ எடுக்க இப்படி துன்புறுத்துவது சரியான செயல் இல்லை’ என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.