தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

சென்னையில் படித்த பான் இந்தியா ஸ்டார்

பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ், நேற்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடினார். இன்னும் அவர் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார். அவரும், அனுஷ்காவும் காதல் திருமணம் செய்வார்களா என்ற கேள்விகள், தொடர்ந்து பல வருடங்களாக கேட்கப்பட்டு வருகிறது. விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா மற்றும் சமந்தா, ராஜ் நிடிமொரு காதல் திருமணம் பற்றிய கேள்விகளுக்கு கூட பதில் கிடைத்துவிட்டது. இன்னும் பிரபாஸ், அனுஷ்கா திருமணம் பற்றிய கேள்விக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. தெலுங்கில் ‘ரெபல் ஸ்டார்’ என்று கொண்டாடப்படும் பிரபாஸ், தனது வெற்றி படங்களின் மூலம் பல கோடி ரூபாய் வசூலை பெற்று, இந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

பிரபாஸின் 46வது பிறந்தநாளையொட்டி ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில், அவர் நடித்த சில பழைய படங்கள் மீண்டும் திரையிடப்படுகின்றன. ‘சலார்’, ‘ஈஸ்வர்’, ‘பவுர்ணமி’, ‘பாகுபலி: தி எபிக்’ (இரண்டு பாகங்கள் இணைக்கப்பட்டது) ஆகிய படங்கள், வரும் 31ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. தற்போது அவர் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ என்ற பான் இந்தியா படம், வரும் ஜனவரி 9ம் தேதி ரிலீசாகிறது. அடுத்து ‘சலார்: பாகம் 2’, ‘ஸ்பிரிட்’, ‘கல்கி 2898 ஏடி: பாகம் 2’, ‘ஃபௌஸி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஆந்திராவில் பிறந்த பிரபாஸ், சில காலம் சென்னையிலுள்ள பள்ளியில் படித்தார். அவருக்கு பல்வேறு மொழிகள் தெரியும். தமிழில் சரளமாக பேசினாலும், அவருக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரியாது.