கர்ப்பத்தை அறிவித்த பரினீதி சோப்ரா
பாலிவுட்டில் நடிகையாகவும், பாடகியாகவும் புகழ்பெற்று விளங்கும் பரினீதி சோப்ரா (வயது 36), கடந்த 2011ல் ‘லேடீஸ் வெர்சஸ் ரிக்கி பாஹ்ல்’ என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். ‘இஷாக்சாதே’ என்ற தனது இரண்டாவது படத்திலேயே தேசிய விருது பெற்ற அவர், நிறைய வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார். அவரும், ஆம் ஆத்மி கட்சி எம்.பி ராகவ்...
பாலிவுட்டில் நடிகையாகவும், பாடகியாகவும் புகழ்பெற்று விளங்கும் பரினீதி சோப்ரா (வயது 36), கடந்த 2011ல் ‘லேடீஸ் வெர்சஸ் ரிக்கி பாஹ்ல்’ என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். ‘இஷாக்சாதே’ என்ற தனது இரண்டாவது படத்திலேயே தேசிய விருது பெற்ற அவர், நிறைய வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார். அவரும், ஆம் ஆத்மி கட்சி எம்.பி ராகவ் சத்தாவும் தீவிரமாக காதலித்தனர். பிறகு 2023ல் அவர்களின் திருமணம் நடந்தது. இந்நிலையில், தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை பரினீதி சோப்ரா பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எங்களின் சிறிய பிரபஞ்சம் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. அளவற்ற ஆசிர்வாதத்தில் நாங்கள் மகிழ்ந்திருக்கிறோம்’ என்றார். அவருக்கு திரையுலகம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.