தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

நாடாளுமன்ற பாதுகாப்பு வல்லுநர் மகள் ஹீரோயின் ஆனார்

சென்னை: ‘ரைட்’ படம் மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகியுள்ளார் அக்‌ஷரா ரெட்டி. அவர் கூறியது: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். எனது தந்தை சுதாகர் ரெட்டி, ஐஐடி படிப்பை முடித்தவர். டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் புல்லட் ப்ரூஃப் பாதுகாப்புக்கான அத்தனை தொழில்நுட்ப அம்சங்களையும் அவர்தான் செய்து கொடுத்தார்.

நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே மார்ஷல் ஆர்ட்ஸ், மற்றும் பாக்சிங் பயிற்சி பெற்றிருக்கிறேன். சினிமாவில் ஆக்சன் ஹீரோயினாக நடிக்க ஆசை. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் உடனடியாக ஒப்புக்கொள்ள தயாராக இருக்கிறேன். மேலும் வில்வித்தை பயிற்சியும் பெற்றுக் கொண்டு வருகிறேன். பைக் ஓட்டுவேன், குதிரை ஏற்றம் தெரியும். மேலும் சிறு வயதிலிருந்து சங்கீதம் பயின்றிருக்கிறேன்.