தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

நோயால் பாதித்த சமந்தாவை கேலி செய்த நபர்கள்

கடைசியாக சமந்தா தெலுங்கில் வெளியான ‘சுபம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இது அவர் தயாரித்த முதல் படமாகும். தற்போது அவர் இந்தி வெப்தொடர் ஒன்றிலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடிக்கிறார். இந்த தெலுங்கு படத்தை அவரே தயாரிக்கிறார். இந்நிலையில், இயக்குனர் ராஜ் நிடிமோருவை தீவிரமாக காதலித்து வரும் சமந்தா, மும்பையில் தனி வீட்டில் குடியேறியுள்ளார். இதை அவர் பல கோடி ரூபாய் செலவில் சொந்தமாக வாங்கியுள்ளார். விரைவில் அவர்கள் திருமணம் நடக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில் சமந்தா அளித்துள்ள பேட்டியில், கடந்த கால கசப்பான சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘என் வாழ்க்கையில் நான் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இருக்கிறேன். நான் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு தவித்தபோது, சிலர் அதை கொண்டாடி மகிழ்ந்தனர். என்னை மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் தாக்கியபோது கேலி செய்தனர். எனக்கு விவாகரத்து நடந்தபோது அதை விமரிசையாக கொண்டாடினர். இதையெல்லாம் பார்த்து எனக்கு மனம் வலித்தது.

ஆனால், படிப்படியாக அதுபற்றி கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன்’ என்றார். சமந்தா பேசியிருப்பது அவரது மன தைரியத்தை காட்டுகிறது என்று, நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர். மேலும், நோயால் கடுமையாக பாதித்து சிகிச்சை பெற்று வந்த சமந்தாவை கேலி செய்த நபர்கள் யார், யார் என்றும் கேட்டுள்ளனர்.