புதுச்சேரி: விதா ஸ்டுடியோ சார்பில் படத்தொகுப்பாளரும், இயக்குனருமான பி.ஆர்.விஜய் தயாரிக்கும் படம், ‘பிக்பாக்கெட்’. இதில் பி.ஆர்.விஜய், யோகலட்சுமி, பவன் கிஷோர், சுந்தர், அலெக்ஸ், இயன், கிறிஸ்டியன், சந்தீப், காந்திபன் நடிக்கின்றனர். பிரேம் ஒளிப்பதிவு செய்ய, ஷாஜகான் இசை அமைக்கிறார். அருண்குமார் எடிட்டிங் செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜே.எஸ்.ஜூபேர் அகமத் இயக்குகிறார். இவர், ஓடிடியில்...
புதுச்சேரி: விதா ஸ்டுடியோ சார்பில் படத்தொகுப்பாளரும், இயக்குனருமான பி.ஆர்.விஜய் தயாரிக்கும் படம், ‘பிக்பாக்கெட்’. இதில் பி.ஆர்.விஜய், யோகலட்சுமி, பவன் கிஷோர், சுந்தர், அலெக்ஸ், இயன், கிறிஸ்டியன், சந்தீப், காந்திபன் நடிக்கின்றனர். பிரேம் ஒளிப்பதிவு செய்ய, ஷாஜகான் இசை அமைக்கிறார். அருண்குமார் எடிட்டிங் செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜே.எஸ்.ஜூபேர் அகமத் இயக்குகிறார். இவர், ஓடிடியில் வெளியான ‘ரிவால்வர்’ என்ற படத்தை இயக்கியவர். அவர் கூறுகையில், ‘இரவு 7 மணிக்கு தொடங்கி, அதிகாலை 4 மணிக்கு கதை முடிவடைகிறது. பிக்பாக்கெட்டை திருடர்களுக்கு பின்னால் மிகப்பெரிய மாபியா கும்பல் செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டி எச்சரிக்கும் படமாக உருவாகிறது’ என்றார். இப்படத்தின் பூஜையில் பங்கேற்று, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.