பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை படமாகிறது: சேரன் இயக்குகிறார்
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை சம்பவங்கள் படமாக உருவாகிறது. இந்த படத்துக்கு அய்யா என தலைப்பு வைத்துள்ளனர். இயக்குனர் சேரன் இயக்க உள்ள இந்த படம் குறித்த அறிவிப்பு, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ராமதாஸின் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது. இதில் ராமதாஸ் வேடத்தில் ஆரி அர்ஜுனா நடிக்கிறார். இவர், மாயா,...
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை சம்பவங்கள் படமாக உருவாகிறது. இந்த படத்துக்கு அய்யா என தலைப்பு வைத்துள்ளனர். இயக்குனர் சேரன் இயக்க உள்ள இந்த படம் குறித்த அறிவிப்பு, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ராமதாஸின் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது.
இதில் ராமதாஸ் வேடத்தில் ஆரி அர்ஜுனா நடிக்கிறார். இவர், மாயா, நாகேஷ் திரையரங்கம், நெடுஞ்சாலை, நெஞ்சுக்கு நீதி உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தை தமிழ் குமரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி.கே.எம். தமிழ்குமரன் தயாரிக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.