கவிஞர் இயக்குனர் ஆகிறார்
சென்னை: சிவன் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ‘பொம்மி அப்பா பேரு சிவன்’ என்கிற திரைப்படத்தை பாடல்கள் எழுதி, தயாரித்து, இயக்குக்கிறார் சிவன் சுப்பிரமணி. மக்களுக்கு மண் சார்ந்த கதைகளை இன்றைய காலத்திற்கு ஏற்ற முறையில் திரைப்படமாக கொடுக்க வந்திருக்கிறேன் என சிவன் சுப்பிரமணி கூறினார். இந்த படத்தை பற்றி இயக்குனர் தொடர்ந்து கூறும்போது, வாழ்க்கையில் பெண் பிள்ளைகளுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை இப்படம் மூலம் தெரிவித்து ஒரு குடும்பத்தில் நடந்த சம்பவத்தை படமாக்குக்கிறேன்.
கிராமத்தில் படிக்கவே வசதி வாய்ப்பு இல்லாத குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் குழந்தை எப்படி தன் வாழ்வில் படித்து முன்னேருக்கிறாள் என்பதே கதை. சென்னை சுற்றுவட்டாரத்தில் படபிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது’’ என்றார். புதுமுகங்கள் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். டெக்னீஷியன்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.